தமிழ்நாடு

tamil nadu

எல்டிடிஇ அமைப்பை சேர்ந்த இருவருக்கு சிறை தண்டனையை குறைத்து விடுதலை செய்த உயர் நீதிமன்றம்...

By

Published : Jun 23, 2022, 9:53 AM IST

இந்தியாவில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட வழக்கில் எல்டிடிஇ அமைப்பை சேர்ந்த இருவருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த பத்து வருட சிறை தண்டனையை 7 வருடமாக குறைத்து விடுதலை செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai-bench-of-madras-high-court-has-reduced-jail-terms-of-two-members-of-ltte எல்டிடிஇ அமைப்பை சேர்ந்த இருவருக்கு சிறை தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றம்...
madurai-bench-of-madras-high-court-has-reduced-jail-terms-of-two-members-of-ltte எல்டிடிஇ அமைப்பை சேர்ந்த இருவருக்கு சிறை தண்டனையை குறைத்த உயர் நீதிமன்றம்...

மதுரை: இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் சுபாஷ்கரன், கிருஷ்ணகுமார் ஆகியோர் 2016 ஆம் ஆண்டு தனி பிரிவு காவல்துறையினர் சோதனையின் போது ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி என்ற இடத்தில் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இவர்கள் தங்கியிருந்த ராமநாதபுரம் திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் தனிப்பிரிவு காவல்துறையினர் சோதனையிட்ட போது தமிழ்நாட்டில் இருந்து சயனைடுகுப்பிகள், சேட்டிலைட் போன், சிம் கார்டுகள் மற்றும் சில போதை பொருட்களும் லேப்டாப் மற்றும் மொபைல் போன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தனர். விசாரணையின் போது தடைசெய்யப்பட்ட எல்டிடிஇ அமைப்பினருக்கு இவர்கள் ஆதரவாக செயல்பட்டது உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்கு 10 வருட கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த தண்டனையை ரத்து செய்யக் கோரியும் தங்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திரும்ப அனுப்ப உத்தரவிடக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன் நேற்று (ஜூன்.22) விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது இந்தியாவில் இனி சட்டவிரோத செயல்களில் தாங்கள் ஈடுபட மாட்டோம் என்றும் நீதிமன்றம் விடுவிக்கும் பட்சத்தில் உடனடியாக இலங்கைக்கு திரும்பி விடுவதாக உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி குற்றவாளிகளுக்குத் தண்டனை விதிக்கப்பட்டு 7 ஆண்டுகள் ஆனதால் பத்து வருட சிறை தண்டனையை 7 வருடமாக குறைத்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் இவர்களை சிறையில் இருந்து விடுவிக்கலாம் என உத்தரவு பிறப்பித்த நீதிபதி சிறையிலிருந்து வெளியேறிய உடன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். வெளியேறும் வரை அகதிகள் முகாமில் தங்கி கொள்ளலாம் என உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: விடுதலை புலிகளுக்கு நிதி திரட்டியவர்களின் ரூ.3.59 கோடி சொத்துகள் முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details