தமிழ்நாடு

tamil nadu

கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பொதுப்பணித் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு

By

Published : Oct 12, 2020, 7:05 PM IST

மதுரை: கண்மாய்க்குள் உள்ள கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கில் பொதுப்பணித் துறைச் செயலர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிளை
மதுரை கிளை

சிவகங்கை மாவட்டம், மணலூரைச் சேர்ந்த கருப்பசாமி பாண்டியன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்துள்ளார்.

அதில், "எங்கள் ஊர் மதுரை - ராமநாதபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ளது. எங்கள் ஊரில் உள்ள மணலூர் கண்மாயை நம்பி, நூற்றுக்கணக்கான ஏக்கரில், வாழை, தென்னை போன்ற பயிர்களை சாகுபடி செய்துவருகிறோம். தற்போது கண்மாய்க்குள் அடர்த்தியாக கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.

இதனால் கண்மாய்க்குள் பன்றிகள் தொல்லை அதிகரித்து வாழை, நெல் போன்ற பயிர்களைச் சேதப்படுத்திவருகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன் கண்மாய்க்குள் ஒரு பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டார். அதுமட்டுமல்லாது மேலும் இரு கொலைகளும் நடந்துள்ளன.

கருவேல மரங்கள் அதிகளவில் இருப்பதால், இது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர், வருவாய் அலுவலர் ஆகியோரிடம் மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லை. எனவே கண்மாய்க்குள் உள்ள கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள், கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், அப்போது வழக்கில் தமிழ்நாடு பொதுப்பணித் துறைச் செயலரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராகச் சேர்த்துள்ளது.

எனவே வழக்கு குறித்து பொதுப்பணித் துறைச் செயலர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 9ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details