தமிழ்நாடு

tamil nadu

சாலை ஆக்கிரமிப்பு: விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

By

Published : Nov 4, 2022, 4:48 PM IST

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு ()

மதுரை கோ-ஆப்டெக்ஸ் குடியிருப்பு காலனிப் பகுதியிலுள்ள சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கில், வரைபடங்கள் போன்றவற்றுடன் விரிவான அறிக்கையை வழக்கறிஞர் ஆணையர் நவம்பர் 14 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: டோக் நகர் விரிவாக்கம், கோ-ஆப்டெக்ஸ் குடியிருப்பு காலனி பொது சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி கோ-ஆப்டெக்ஸ் காலனி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பொதுசாலை ஆக்கிரமிப்பு ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டார்.

வழக்கறிஞர் ஆணையர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு உள்ளூர் சர்வேயர் உடன் நேரில் சென்று அளவீடுகள் மற்றும் குறிப்பு மூலம் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். மேலும் சாலையின் அளவு, புகைப்படங்கள் மற்றும் வரைபடங்கள் போன்றவற்றுடன் விரிவான அறிக்கையை நவம்பர் 14 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: சர்ச்சையில் சிக்கிய மேயர் இந்திராணி; மதுரையில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details