தமிழ்நாடு

tamil nadu

Avaniyapuram jallikattu: ஆன்லைன் பதிவில் குழப்பம் இல்லை - அமைச்சர் மூர்த்தி

By

Published : Jan 12, 2022, 1:31 PM IST

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர்கள் என தற்போது வரை 3 ஆயிரத்து 500 பேர் ஆன்லைன் பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் பதிவில் எந்தவித குழப்பமும் இல்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மூர்த்தி பேட்டி
அமைச்சர் மூர்த்தி பேட்டி

மதுரை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு கரோனா கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

மதுரை அவனியாபுரத்தில் ஜன.14ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளதையடுத்து, அங்கு செய்யப்பட்டு வரும் ஏற்பாடுகள் குறித்து வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி இன்று (ஜன.12) நேரில் பார்வையிட்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

வீட்டிலிருந்தே பார்க்க அறிவுறுத்தல்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மூர்த்தி, "மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாடு அரசின் நிபந்தனைகளுக்குள்பட்டு நடைபெற உள்ளது. 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ஊடகங்களின் உதவியோடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நேரலை செய்யப்பட உள்ளதால், பொதுமக்கள் வீட்டிலிருந்தவாறே கண்டுகளிக்க கேட்டுக் கொள்கிறோம்.

அமைச்சர் மூர்த்தி பேட்டி

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. அதேபோல், போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கும், அதன் உரிமையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அறிவிப்பு செய்த ஐந்து மணி நேரத்தில் 3 ஆயிரத்து 500 பேர் பதிவு செய்துள்ளனர். ஆன்லைன் பதிவில் சிரமம் இல்லை.

பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் வீரர்களை மருத்துவத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் இணைந்து தகுதி தேர்வு செய்வர். போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்களின் எண்ணிக்கை குறித்து அந்தந்த விழாக் குழுக்கள் முடிவு செய்யும். இதனை மதுரை மாவட்ட நிர்வாகம் முறைப்படுத்தும். அனைத்து விதமான பாதுகாப்பு நடைமுறைகளோடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பழனியில் தைப்பூச திருவிழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details