தமிழ்நாடு

tamil nadu

Untouchability: புதுக்கோட்டை தீண்டாமை கொடுமை; நீதிமன்றத்தில் முறையீடு!

By

Published : Dec 28, 2022, 1:38 PM IST

Updated : Dec 28, 2022, 7:30 PM IST

புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் கழிவுநீரை குடித்த 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை தீண்டாமை கொடுமை: உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு!
புதுக்கோட்டை தீண்டாமை கொடுமை: உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு!

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஒரு முறையீட்டை முன்வைத்தார். அதில், “புதுக்கோட்டை இறையூரில், அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது.

இந்த தண்ணீரைக் குடித்ததால் பல குழந்தைகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தபோது, அப்பகுதியில் இரட்டைக்குவளை முறை வழக்கத்திலிருந்தது தெரிய வந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொறுத்தவரை, பல கிராமங்களிலும் இது போன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.

ஆகவே புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். புதுக்கோட்டை இறையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, "முறையாக மனுத் தாக்கல் செய்தால், வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:புதுக்கோட்டை தீண்டாமை கொடுமைக்கு செக் வைத்த கலெக்டர் - முழுப்பின்னணி

Last Updated : Dec 28, 2022, 7:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details