தமிழ்நாடு

tamil nadu

மாரியம்மன் கோவில் திருவிழா - கூழ் அண்டாவில் தவறி விழுந்த பக்தர் உயிரிழப்பு

By

Published : Aug 2, 2022, 9:52 AM IST

கூழ் அண்டாவில் தவறி விழுந்து இறந்து போன பக்தரின் சிசிடிவி காட்சிகள்
கூழ் அண்டாவில் தவறி விழுந்து இறந்து போன பக்தரின் சிசிடிவி காட்சிகள் ()

மதுரையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் கோவில் அருகே கூழ் தயாரிப்பில் ஈடுபட்ட பக்தர் ஒருவர், கொதிக்கும் கூழ் அண்டாவுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.

மதுரை:ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் பக்தர்கள் விசேஷ வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத 2ஆவது வெள்ளிக் கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

பக்தர்கள் அன்பளிப்பாக வழங்கும் பொருட்களை வைத்து அம்மனுக்கு கூழ்காய்ச்சி படைத்து பூஜைகள் முடிந்த பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவர். அதற்காக சுமார் 6க்கும் மேற்பட்ட பெரிய பாத்திரத்தில் (அண்டாவில்) பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியை சேர்த்த முத்துக்குமார் என்ற முருகன் சில பக்தர்களுடன் கூழ் காய்ச்சி கொண்டிருந்தார்.

கூழ் அண்டாவில் தவறி விழுந்து இறந்து போன பக்தரின் சிசிடிவி காட்சிகள்

அப்போது எதிர்பாராத விதமாக அவருக்கு வலிப்பு வந்ததால் கொதிக்கும் கூழ்அண்டாவில் விழுந்தார். அவர் மீது கூழ் கொட்டி உடல் முழுவதும் வெந்தது. அவரின் கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் முத்துக்குமார் கூழ் காய்ச்சிய அண்டாவில் தவறி விழும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க:அந்தியூர் திமுக எம்.எல்.ஏ கார் விபத்துக்குளான சிசிடிவி காட்சி

ABOUT THE AUTHOR

...view details