தமிழ்நாடு

tamil nadu

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்; 500க்கும் மேற்பட்டோர் மலர் தூவி மரியாதை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 3, 2023, 12:42 PM IST

Organs of brain dead patient was donated: இறந்தும் பல உயிர்களை வாழ வைக்கும் வகையில் உடல் உறுப்புகளை தானம் செய்த மத்தூரைச் சேர்ந்த நபரை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் மலர் தூவி வழி அனுப்பி வைத்தனர்.

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

தருமபுரி:விபத்தில்படுகாயம் ஏற்பட்டதால் மூளைச்சாவு அடைந்தவரது உடல் தானம் செய்யப்பட்டதையடுத்து அவரது உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கோத்தகோட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). இவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார். இதனால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு மூளை செயல் இழந்தது தெரிய வந்துள்ளது. பின்னர், உறுதி செய்து கொண்ட மருத்துவக் குழுவினர் அவரது உறவினர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர்கள் முன் வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் குழுவினர், உடல் உறுப்புக்களை தானமாக பெற்றனர். தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகளில் முதலில் இருதயம் பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் காவல் துறை பாதுகாப்புடன் சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும், அவரது உடலில் இருந்து இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொன்று கோவை மருத்துவமனைக்கும், கல்லீரல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. மேலும், இரண்டு கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கண் பார்வை வேண்டி பதிவு செய்தவர்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: காதலிக்க மறுத்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை; நெல்லையில் இளைஞர் வெறிச்செயல்

இதனைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் கோவிந்தராஜனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது, பிரேத பரிசோதனை கூடம் அருகே மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், அவரது உடலுக்கு மலர் மாலை அனிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதனை அடுத்து, பிரேதப் பரிசோதனை கூடத்தில் இருந்து அமரர் ஊர்திக்கு எடுத்துச் செல்கின்ற வரை, சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு இருபுறமும், அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அதேபோல் மருத்துவம் பயின்று வருகின்ற மருத்துவ, செவிலிய மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். தொடர்ந்து, உடல் உறுப்புகளை தானம் செய்த கோவிந்தராஜனின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செய்து வழி அனுப்பி வைத்தனர்.

மேலும் இதயம் அறுவை சிகிச்சை செய்தவுடன், போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு காவல் துறையினர் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சென்னைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டது. த

இதையும் படிங்க: கொம்புத்துறையா..? கடையக்குடியா..?.. திருச்செந்தூர் அருகே நூதன பிரச்சனை.. அரசு தலையிட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details