தமிழ்நாடு

tamil nadu

ஓசூர் நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்ட 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்.. வனத்துறையினர் எச்சரிக்கை!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 1:18 PM IST

ஓசூர் அருகே கர்நாடக வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓசூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம்
ஓசூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம்

ஓசூர் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானை கூட்டம்

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகேயுள்ள நொகனூர் வனப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தஞ்சமடைந்துள்ளதால், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், தமிழகத்தின் ஓசூர் அருகேயுள்ள தேன்கனிகோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனூர் வனப்பகுதியில் புகுந்துள்ளன. மேலும், வனப்பகுதியை ஒட்டியுள்ள நொகனூர், மரக்கட்டா, உச்சனப்பள்ளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டிருக்கும் நிலையில், அவற்றை 20க்கும் மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும், யானைகளை மீண்டும் கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டி விடத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பகல் நேரத்தில் வனப்பகுதிக்கு அருகேயுள்ள விவசாயத் தோட்டங்களில் பணிபுரியும்போது பாதுகாப்பாக இருக்கும்படியும், மாலை மற்றும் இரவு நேரத்தில் வனப்பகுதிக்கு அருகே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள் கிராம மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:தேனியில் கையோடு வந்த தார் சாலை.. தரமற்ற சாலையை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை!

ABOUT THE AUTHOR

...view details