தமிழ்நாடு

tamil nadu

கெலவரப்பள்ளி அணை நீரில் நுரை, துர்நாற்றம்; கிருஷ்ணகிரி விவசாயிகள் கவலை!

By

Published : Dec 23, 2022, 12:07 PM IST

ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் நீரில், அதிகப்படியான நுரைப்பொங்குவதோடு துர்நாற்றம் வீசுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரில் நுரை
கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரில் நுரை

கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரில் நுரை

கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று விநாடிக்கு 540 கனஅடிநீர் வரத்தாக இருந்த நிலையில், இன்று விநாடிக்கு 460 கனஅடிநீர் வரத்தாக உள்ளது. இந்த 460 கனஅடி நீரானது தென்பெண்ணை ஆற்றில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் முழுக்கொள்ளளாவன 44.28 அடிகளில் தற்போது 39.85 அடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கெலவரப்பள்ளிஅணையிலிருந்து வெளியேற்றப்படும் தென்பெண்ணை ஆற்று நீரில், நுரைப்பொங்கி காணப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் நேரங்களில் கர்நாடகா மாநில தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் கலப்பதாக வழக்கமான குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாகச் செல்லும், ரசாயன நுரை துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் ஆற்று நீர் வெள்ளை நிறத்தில் பனிப்போர்த்தியது போல் காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு சாதகமான தீர்ப்பு வரும்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details