தமிழ்நாடு

tamil nadu

'2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல மோசடிகளைச் செய்த திமுக ஊழலைப் பற்றி பேசலாமா?'

By

Published : Dec 9, 2020, 10:39 AM IST

கரூர்: ஊழலைப் பற்றி பேச திமுகவிற்கு எந்தவித தகுதியும் இல்லை எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு
போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

கரூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வாகனங்களில் வேக கட்டுப்பாட்டுக் கருவி பொருத்துவதில் ஊழல் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டு சொல்லிவருகின்றார் ஸ்டாலின். அதனையடுத்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆயிரக்கணக்கில் ஊழல் என்று சொல்லிவருகின்றனர். தினந்தோறும் அரசு மீதும், முதலமைச்சர் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சொல்லிவருகிறார் ஸ்டாலின்.

போக்குவரத்துத் துறை சிறப்பாகச் செயல்பட்டு விருதுகளை இந்திய அளவில் பெற்றுள்ளது. எஃப்சி (Fc) எடுக்கச் செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில்தான் வாங்க வேண்டும். அமைச்சர் சொல்லும் நிறுவனங்களில்தான் வாங்க வேண்டும் என எந்த உத்தரவும் பிறக்கப்படவில்லை.

மத்திய அரசின் உத்தரவின் பெயரில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இரவு நேரங்களில் வாகனங்களில் ஒளிரும் பட்டைகளைப் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒரிஜினல் பட்டை விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும், அதற்கும் தடையாணை பெறப்பட்டுள்ளது” என்றார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

மேலும், சிறப்பாக நடைபெற்றுவரும் ஆட்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் இவ்வாறு குற்றஞ்சாட்டிவருவதாகவும், 2ஜி ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல மோசடிகளைச் செய்த திமுக இதைப்பற்றி பேசலாமா எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க...'வேளாண்மை செழிக்கட்டும்! சட்டங்கள் நொறுங்கட்டும்!' - ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details