ETV Bharat / city

'வேளாண்மை செழிக்கட்டும்! சட்டங்கள் நொறுங்கட்டும்!' - ஸ்டாலின்

author img

By

Published : Dec 8, 2020, 8:08 PM IST

சென்னை: "வேளாண்மை செழிக்கட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்!" என திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நடைபெறும் பொது வேலைநிறுத்தம் குறித்து பதிவிட்டுள்ளார்.

DMK head MK Stalin posted to support farmers in Facebook
DMK head MK Stalin posted to support farmers in Facebook

திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், "உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைந்து கிடக்கிறது. உயிர் கொடுக்கும் உழவர் உயிர், விலை பேசி விற்கப்படும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

உழவு என்பது தனிப்பட்ட உழவர் தொழில் மட்டுமல்ல. உயிர் வாழ்வோர் அனைவரின் உரிமை! மண்ணையும் மக்களையும் காக்க இன்று நடைபெறும் பொது வேலைநிறுத்தம் வெல்லட்டும்! வேளாண்மை செழிக்கட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.