தமிழ்நாடு

tamil nadu

கரூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர்

By

Published : Jan 5, 2023, 4:23 PM IST

கரூர் மாவட்டத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியலை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

கரூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்
கரூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்

கரூர்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணங்கள் போன்றவற்றால் உயிரிழந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்து, புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்களின் விண்ணப்பங்களை ஏற்று, வாக்காளர் இறுதிப் பட்டியல் ஜனவரி முதல் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி கரூர் மாவட்டத்தில் ஜன 1,2023ஆம் தேதியைக் கணக்கில் கொண்டு சுருக்கம் முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட மாநிலம் மற்றும் தேசிய கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), கரூர் உள்ளிட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளர்கள் 4,30,725 பேர், பெண் வாக்காளர்கள் 4,63,976 பேர், இதர 94 பேர் என மொத்தம் 8,94,345 பேர் உள்ளனர். இதுமட்டும் இன்றி நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தமாக 16,065 பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் நீக்கப்பட்டு, புதிதாக 17,475 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் குளித்தலை கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள், வாக்குச்சாவடி அமைவிடங்கள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 74 சதவீதம் ஆதார் இணைப்பு முடிவடைந்துள்ளது.

மக்கள் தங்கள் வாக்காளர் அட்டையில், ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் உரிய படிவத்தில் விண்ணப்பம் செய்து மாற்றம் செய்துகொள்ளலாம். இதற்காக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்காளர் உதவி மையத்தினை நேரிலோ அல்லது 1930 என்று இலவச தொலைபேசி எண்ணாலோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் www.nvsp.in மற்றும் ’voters help line’ என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து திருத்தங்கள் சம்பந்தமாக உதவிகளைப் பெறலாம்” என தெரிவித்தார்.

கரூர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்

இந்நிகழ்வில் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி உள்ளிட்ட அரசு அதிகாரிகள், அதிமுக, திமுக, பாஜக, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 6.20 கோடி வாக்காளர்கள்: இறுதி பட்டியலை வெளியிட்ட சாகு!

ABOUT THE AUTHOR

...view details