தமிழ்நாடு

tamil nadu

வேன் மோதி போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழப்பு: ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

By

Published : Nov 22, 2021, 3:13 PM IST

ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

வாகன சோதனையின்போது வேன் மோதி போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழந்ததற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கரூர்: வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கனகராஜ் (55). இன்று (நவ.22) காலை அவர், வெங்கக்கல்பட்டி பிரிவு மேம்பாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

வேன் மோதி போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழப்பு

அப்போது அந்த வழியாக வந்த வேனை ஆய்வாளர் கனகராஜ், நிறுத்த முயன்றார். ஆனால், அந்த வேன் நிற்காமல் கனகராஜ் மீது மோதிவிட்டு சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேலு உத்தரவின்பேரில் கரூர் டிஎஸ்பி தேவராஜ் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

இந்நிலையில் வேன் மோதி உயிரிழந்த போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய பொதுப்பணித் துறை மண்டலம்'

ABOUT THE AUTHOR

...view details