தமிழ்நாடு

tamil nadu

தொடங்கியது சுற்றுலா சீசன்.. குமரியில் அலைமோதும் மக்கள்.!

By

Published : Dec 3, 2022, 1:11 PM IST

people crowded in Kanyakumari  tourist season  Kanyakumari  tourist  சுற்றுலா சீசன்  குமரியில் அலைமோதும் மக்கள்  கன்னியாகுமரியில் மக்கள் கூட்டம்  கன்னியாகுமரி  காமராஜர் நினைவு மணி மண்டபம்  கன்னியாகுமரி அம்மன் கோயில்  அரசு அருங்காட்சியம்  பே வாட்ச் தீம் பார்க்  மகாவீர் ஜெயின் கோயில்  விவேகானந்தர் பாறை நினைவு மண்டம்  திருவள்ளுவர் சிலை  காந்தி மண்டபம்  சன் செட் பாயிண்ட்

சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

கன்னியாகுமரி: இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி, ஐந்திணைகளில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நான்கையும் ஒருகிணைந்த மாவட்டமாக திகழ்கிறது. மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கில் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்திய பெருங்கடலும் எல்லையாக கொண்டுள்ளது. மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் வகிக்கிறது.

பல வரலாற்று சின்னங்களை கொண்டிருக்கும் கன்னியாகுமரி, சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கமாக திகழ்கிறது. இங்கு, சன் செட் பாயிண்ட், கடலுக்கு நடுவே அமைந்திருக்கும் விவேகானந்தர் பாறை நினைவு மண்டம், திருவள்ளுவர் சிலை, முக்கடல் சந்திப்பில் அமைந்துள்ள காந்தி மண்டபம், பெரும் தலைவர் காமராஜர் நினைவு மணி மண்டபம், கன்னியாகுமரி அம்மன் கோயில், அரசு அருங்காட்சியம், பே வாட்ச் தீம் பார்க், மகாவீர் ஜெயின் கோயில் என எண்ணற்ற சிறப்பு சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளது.

குமரியில் அலைமோதும் மக்கள்

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு ஆண்டிற்கு மூன்று முறை சுற்றுலா சீசன் உள்ளது. அதில் நவம்பர் 17ஆம் தேதி தொடங்கி ஜனவரி இருபதாம் தேதி வரை, ஐயப்ப பக்தர்களுடைய சீசன் ஆகும். இங்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி, வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும் அதிகம் வருகை தருகின்றனர்.

இந்நிலையில், தற்போது சீசன் தொடங்கிய நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள், குமரியில் அலைமோதி வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கரோனா காலகட்டத்திற்குப் பின்பு கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!!

ABOUT THE AUTHOR

...view details