தமிழ்நாடு

tamil nadu

இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை! கன்னியாகுமரியில் நடந்தது என்ன?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 30, 2023, 1:15 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே பூவன்கோடு பகுதியில் குடும்ப தகராறில் 2 மகன்களை கொலை செய்துவிட்டு, தாய் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

mother killed her two sons and attempt suicide
2 மகன்களை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்

கன்னியாகுமரி: திருவட்டார் அருகே உள்ள பூங்கோடு செங்கோடி கிராமத்தை சேர்ந்தவர் யேசுதாஸ் (52). இவரது மனைவி சீமா (38). கட்டிட தொழிலாளியான யேசுதாஸ் மற்றும் சீமா தம்பதிக்கு 15 மற்றும் 7 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இருவரும் ஆற்றூர் அருகே தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இரு மகன்களும் நரம்பு பிடிப்பு நோயினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இருப்பினும் இரு குழந்தைகளுக்கும் நோய் பாதிப்பு சரியாகவில்லை எனக் கூறப்படுகிறது. இது சீமாவுக்கு பெரும் மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் அவருக்கும் அவரது கணவர் யேசுதாசுக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் யேசுதாஸ் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகிறது. கணவன் மனைவி இருவரிடையே ஏற்பட்ட தகராறினால் மனமுடைந்த சீமா, அவரது 2 மகன்களுடன் வீட்டில் தனித்து இருந்துள்ளார்.

இந்நிலையில் அதிகாலை அவர்கள் வீட்டில் இருந்து கரும்புகை வந்து உள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்துள்ளனர். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் அடைக்கப்பட்டு இருந்ததால், உள்ளே என்ன நடந்தது என்பது குறித்து தெளிவான தகவல் ஏதும் கண்டறியப்படவில்லை.

இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து வீட்டின் கதவை உடைத்து அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் படுக்கை அறையில் இருந்து புகை வருவதை கண்டுள்ளனர். அந்த அறையும் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, இரு மகன்களுடன் சீமா படுக்கையில் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருவட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில், உடல்களை கைபற்றி மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து திருவட்டார் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், மகன்களுக்கு நரம்பு பிடிப்பு நோய் இருந்ததால் சீமா மிகுந்த மன வேதனையில் இருந்ததும், கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டதும் தெரியவந்தது. நேற்று இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவர் வீட்டில் இருந்து வெளியே சென்றது, அவருக்கு மேலும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் சீமா மகன்களை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:பாலியல் தொழிலுக்காக பங்களாதேஷ் சிறுமி கடத்தல்? - ஒரு பெண் உள்பட மூவர் கைது

ABOUT THE AUTHOR

...view details