தமிழ்நாடு

tamil nadu

மகாளய அமாவாசை - முக்கடல் சந்திப்பில் சங்கமமான பக்தர்கள்...!

By

Published : Sep 28, 2019, 10:28 AM IST

கன்னியாகுமரி: புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமானோர் தர்ப்பணம் பூஜை செய்தனர்.

kaniyakumari

மகாளய அமாவாசையில் கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். அதன்படி, இன்று மாகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித் துறை கடற்கரையில் பொதுமக்கள் ஏராளமானோர் அதிகாலை நான்கு மணிக்கே குவியத்தொடங்கினர்.

பின்னர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு முக்கடலில் நீராடினர். மேலும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு புரட்டாசியில் வந்த மகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நடை அதிகாலை 4.30 மணிக்கே திறக்கப்பட்டது.

தர்ப்பண பூஜையின்போது

பின்னர் அம்மனுக்கு வைர கிரீடம், வைர மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டு அம்மனை வழிப்பட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க:

ஆடி அமாவாசை பூஜைக்கு தயாராகிறது குமரி கடற்கரை

Intro:20ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை வந்த மகாளய அமாவாசை.கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.Body:tn_knk_01_maklaya_amavaasai_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

20ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை வந்த மகாளய அமாவாசை.கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் திரளான பக்தர்கள் புனித நீராடினர்.
மகாளய அமாவாசையையொட்டி இன்று கன்னியாகுமரி கடலில் ஏராளமானோர் முன்னோருக்கு பலிகர்ம பூஜைகள் செய்தனர். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை ஆகும்.மகாளய அமாவாசை இந்த ஆண்டு 20ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை வந்திருப்பது அதிகப்படியான விசேஷம் என பக்தர்கள் தெரிவித்தனர். இந்த நாளில் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் இந்துக்கள் அதிகாலையில் புனித நீராடி மறைந்த முன்னோர்களுக்கு பலிதர்ப்பணம் செய்வது வழக்கம். இன்று மாகாளய அமாவாசையையொட்டி கன்னியாகுமரியில் அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் குவிய தொடங்கினர். அவர்கள் முக்கடல் சங்கமிக்கும் சங்கிலித்துறை கடற்கரையில் புனித நீராடினர். பின்னர், கடற்கரையில் இருந்த புரோகிதர்கள் வேத மந்திரங்கள் உச்சரிக்க முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து, கடலில் தர்ப்பணம் செய்தனர். தொடர்ந்து, கடற்கரையில் உள்ள பரசுராம் விநாயகர்கோயில், பகவதிஅம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்

மகாளய அமாவாசையையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பகல் 12.30 மணி வரை கோவில் நடை திறந்திருந்தது.
அம்மனுக்கு வைர கிரீடம், வைர மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டிருந்தன. மதியம் அன்னதானம், மாலையில் சாயரட்ச பூஜை, இரவு அம்மன் பல்லக்கில் 3 முறை கோயிலை வலம் வருதல், வெள்ளி சிம்மாசனத்தில் தாலாட்டு தொடர்ந்து, அத்தாழ பூஜை, ஏகாந்த தீபாராதனை போன்றவை நடந்தது.விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், பகவதி அம்மன் கோயில் மேலாளர் ஆறுமுகநயினார், ஆகியோர் செய்திருந்தனர்.Conclusion:

ABOUT THE AUTHOR

...view details