ETV Bharat / state

ஆடி அமாவாசை பூஜைக்கு தயாராகிறது குமரி கடற்கரை!

author img

By

Published : Jul 30, 2019, 3:11 PM IST

நாகர்கோயில்: குமரி கடற்கரையில் ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

kanyakumari seashore

இந்துக்களின் முக்கியமான நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்றாகும். இந்த நாளில் மக்கள் பிரசித்திப்பெற்ற முக்கியமான புனித நீர்நிலைகளுக்குச் சென்று இறந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள்.

ஆடி அமாவாசை பூஜைக்கு தயாராகிறது குமரி கடற்கரை!

இந்நிலையில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் இதற்காக ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. அப்பகுதியில் குப்பைகள் அகற்றப்பட்டும், கடற்கரை அருகே அமைந்துள்ள சுற்றுச்சுவரில் உடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன.

Intro:ஆடி அமாவாசை நாளை வருவதை ஒட்டி பக்தர்கள் தங்கள் இறந்த முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து தர்பணம் செய்ய வசதியாக கன்னியாகுமரியில் ஆயத்த பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.Body:tn_knk_02_amavasai_preparations_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
ஆடி அமாவாசை நாளை வருவதை ஒட்டி பக்தர்கள் தங்கள் இறந்த முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜை செய்து தர்பணம் செய்ய வசதியாக கன்னியாகுமரியில் ஆயத்த பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்துக்களின் முக்கியமான நாட்களில் ஆடி அம்மாவாசையும் ஒன்று. இந்த நாளில் பக்தர்கள் முக்கியமான பிரசித்திப்பெற்ற புனித நீர்நிலைகளுக்கு சென்று இறந்த தங்கள் முன்னோர்களை நினைத்து அங்கு அமர்ந்திருக்கும் புரோகிதர்கர்களிடம் பலிகர்ம பூஜை செலுத்தி தர்பணம் செலுத்துவர். இதனால் ஆடி அம்மாவாசையன்று புனித நீர்நிலைகளுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். இந்நிலையில் நாளை ஆடி அம்மாவாசை வருவதையொட்டி கன்னியாகுமரிக்கும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தருவர். இதற்கென கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் குப்பைகள் அகற்றறப்பட்டு உடைந்த பகுதிகள் சரிசெய்யப்பட்டு வர்ணம் பூசும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது. மேலும் இங்கு பலிகர்மபூஜை செய்யும் புரோகிதர்கள்,போத்திகள் தாங்கள் அமர்ந்து பூஜை செய்யும் இடங்களில் பூஜைக்கான பொருட்களை கொண்டு வைத்து ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.