தமிழ்நாடு

tamil nadu

86 ஆண்டுகளாக நடந்து வரும் சமய மாநாட்டுக்கு தடை.. திமுக கூட்டணி, பாஜக மாறி மாறி புகார்!

By

Published : Feb 18, 2023, 8:01 AM IST

மாசி கொடை விழாவை முன்னிட்டு 86 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் சமய மாநாடு நடத்த அரசு தடை விதித்தை எதிர்த்து, பாஜகவினர் கன்னியாகுமரி எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். போட்டி மனுவாக திமுக தலைமையிலான கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்தனர்.

மாறி மாறி புகார் அளித்த திமுக பாஜக
மாறி மாறி புகார் அளித்த திமுக பாஜக

மாறி மாறி புகார் அளித்த திமுக பாஜக

கன்னியாகுமரி:பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி கொடை விழா 10 நாட்கள் மிகவும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசி கொடை விழா மார்ச் மாதம் நான்காம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறநிலை துறை சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

இந்த கோயில் விழாவின்போது 10 நாட்களும் கோயிலில் இந்து அமைப்புகள் சார்பில் சமய மாநாடு கிட்டத்தட்ட 86 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சமய மாநாடு இந்து அமைப்புகள் நடத்தத் தடை விதித்துள்ளது. சமய மாநாடுகளை அறநிலையத்துறை நேரடியாக நடத்தும் என அறிவித்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக நாகர்கோவிலில் எஸ்பி அலுவலகத்தில் நாகர்கோவில் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி தலைமையில் மாவட்ட பாஜக பொருளாளர் முத்துராமன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் சமய மாநாடு நடத்த அனுமதி கேட்டு கோரிக்கை மனு அளித்தனர். இதற்கு போட்டி மனுவாக திமுக தலைமையிலான கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நாகர்கோவில் எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏவி பெல்லார்மின், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் முழுக்க முழுக்க அறநிலை துறைக்கு சொந்தம் என்றும், இங்கு நடத்தப்படுகின்ற பூஜைகள் கோயில் ஊழியர்களுக்கான ஊதியம் அனைத்துமே அறநிலைத்துறை சார்பில் செய்யப்பட்டு வருவதால் அறநிலையத்துறையே திருவிழா காலங்களில் இந்த மாநாட்டை நடத்துவது பொருத்தமானது எனக் கூறினார்.

மேலும், வெளியிலிருந்து மூன்றாவது நபர் உள்ளே நுழைந்து மாநாட்டை நடத்த அவசியம் இல்லை என பேசிய அவர், கோயில் வளாகங்கள் அரசியல் வளாகங்களாக மாற்ற வேண்டாம் என்றும் ஆலயங்கள் ஆலயங்களாக இருக்கட்டும் அங்கு அரசியல் வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பழனி கோயிலில் மொட்டை அடிக்கும் இடங்களில் கூடுதல் கட்டணம் வசூல் - பக்தர்கள் தர்ணா!

ABOUT THE AUTHOR

...view details