ETV Bharat / state

பழனி கோயிலில் மொட்டை அடிக்கும் இடங்களில் கூடுதல் கட்டணம் வசூல் - பக்தர்கள் தர்ணா!

author img

By

Published : Feb 17, 2023, 10:59 PM IST

பழனி இடும்பன் குளம் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மொட்டை அடிக்கும் இடங்களில் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்பதாக கூறி, ஏராளமானோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பழனி கோவிலில் மொட்டை அடிக்கும் இடங்களில் கூடுதல் கட்டணம் வசூல்- பக்தர்கள் தர்ணா!
பழனி கோவிலில் மொட்டை அடிக்கும் இடங்களில் கூடுதல் கட்டணம் வசூல்- பக்தர்கள் தர்ணா!

பழனி கோவிலில் மொட்டை அடிக்கும் இடங்களில் கூடுதல் கட்டணம் வசூல்- பக்தர்கள் தர்ணா!

திண்டுக்கல்: பழனி இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இடும்பன் குளம் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மொட்டை அடிக்கும் இடங்களில் இன்று(பிப்.17) காலை மொட்டை அடிக்க வரும் பக்தர்களிடம் கட்டாயமாக ரூ.100 முதல் ரூ.200 வரை கேட்பதாக பக்தர்கள் புகார் தெரிவித்து மொட்டையடிக்கும் இடம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த பக்தர்கள் இன்று காலை மொட்டை அடிக்க வரும் பொழுது அதிகாலை ஐந்து மணி முதல் 9 மணி வரையும் கூடுதலாக கட்டணம் கொடுத்தால் தான் மொட்டை அடிப்போம் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தாங்கள் மன உளைச்சல் ஏற்பட்டதாகும், இதனால் பழனி கோவிலுக்குட்பட்ட தேவஸ்தான கூட்டத்திற்கு சென்று அனைவரும் மொட்டை அடித்ததாகவும் , தமிழ்நாடு அரசு மொட்டை அடிக்க அனைத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நிர்வாக சார்பில் மொட்டை அடிக்கும் இடங்களில் இலவசம் என அறிவித்திருந்த நிலையில், இடும்பன்குள நிர்வாகத்தில் மட்டும் மொட்டை அடிப்பதற்கு இலவசம் என பதாகைகள் வைக்கப்படாமல் இருப்பதும்; மொட்டை அடிக்க 100 முதல் 200 ரூபாய் வரை கட்டாயமாக வசூலிப்பதாகவும் பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.

மேலும், இடும்பன் குளம் கோவில் நிர்வாகத்திற்கு உட்பட்ட மொட்டை அடிக்கும் இடங்களில் 27 பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் ஊழியர்கள் மது போதையிலும், போதை வஸ்துகளை பயன்படுத்தியும் ,மொட்டை அடிப்பதால் சுமார் 15 நாட்கள் முதல் விரதம் இருந்து மாலை அணிந்து பாதயாத்திரையாக வரும் தங்களுக்கு இது போன்ற சம்பவங்களால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதாகும் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:மருத்துவக் கழிவுகளின் கூடாரமாக மாறும் தென்காசி… தடுக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.