தமிழ்நாடு

tamil nadu

காட்டு யானைகளால் வாழை மற்றும் தென்னை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

By

Published : Jun 20, 2022, 5:35 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், தெள்ளாந்தி அருகே தாடகை மலையிலிருந்து காட்டு யானைக்கூட்டம் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களில் உள்ள சுமார் 700-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தி சென்றதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

காட்டு யானைகளால் வாழை மற்றும் தென்னை மரங்கள் சேதம் விவசாயிகள் வேதனை
காட்டு யானைகளால் வாழை மற்றும் தென்னை மரங்கள் சேதம் விவசாயிகள் வேதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் ஏராளமான யானைகள் உள்ளன. அதேபோன்று சிறுத்தைகள், புலிகள், கரடிகள், மான் இனங்கள், பன்றிகள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் அடிக்கடி காடுகளை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதால், மலைக்கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பெரும்சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

விளைநிலங்களில் உள்ள பயிறு வகைகளை காட்டுயானைக்கூட்டங்கள் அடிக்கடி வந்து சேதப்படுத்தி சென்றுவிடுவதால், விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்து சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அந்தவகையில் தாடகை மலையில் இருந்து யானைகள் கூட்டம் தெள்ளாந்தி அருகே உள்ள உடையார்கோணம் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து, சுமார் 700-க்கும் மேற்பட்ட குலைதள்ளும் பருவத்தில் உள்ள வாழை மரங்களையும் தென்னை மரங்களையும் அழித்து சேதப்படுத்திச் சென்றுள்ளது.

விவசாயி பேட்டி

இதனால் கடன் வாங்கி பயிர் செய்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். யானைகள் காடுகளை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருவதை வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்; விளைநிலங்களை சேதப்படுத்தி உள்ளதால் அதற்கு உரிய இழப்பீடும் அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:நடுவானில் சிக்கிய கேபிள் கார்... 11 பேர் சிக்கி தவிப்பு...

ABOUT THE AUTHOR

...view details