ETV Bharat / bharat

நடுவானில் சிக்கிய கேபிள் கார்... 15 பேர் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணி தீவிரம்...

author img

By

Published : Jun 20, 2022, 3:38 PM IST

Updated : Jun 20, 2022, 4:59 PM IST

ஹிமாச்சல பிரதேசத்தில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடுவானில் கேபிள் கார் நின்றதில் 15 சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர்.

cable-car-incident-in-himachal-tourists-trapped-rescue-operation
cable-car-incident-in-himachal-tourists-trapped-rescue-operation

சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டம் பர்வானூவில் இயக்கப்பட்டுவந்த கேபிள் கார் இன்று (ஜூன் 20) தொழில்நுட்பக்கோளாறு காரணமாக நடுவானில் நின்றது. இந்த காரின் உள்ளே 15 சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து பர்வானூ போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

  • #WATCH | Himachal Pradesh: Rescue operation underway at Parwanoo Timber Trail where a cable car trolly with tourists is stuck mid-air.

    2 people have been rescued, 9 are still stranded. NDRF team shortly to reach the spot: Dhanbir Thakur, SDM Kasauli pic.twitter.com/gygYHK0II0

    — ANI (@ANI) June 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனடிப்படையில் போலீசார் மாநில பேரிடர் மீட்புக்குழுவினருடன் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், "இந்த விபத்து 1.30 மணியளவில் நடந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர். ஒவ்வொருவராக மீட்டுவருகிறோம். 11 பேரை மீட்டுள்ளோம். மீதமுள்ள 4 பேரை மீட்கும் பணி நடந்துவருகிறது. விரைவில் அனைவரையும் மீட்போம்" எனத் தெரிவித்தனர். இதனிடையே தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் சம்பவயிடதிற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேரளாவில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள் பலி- திக்திக் சிசிடிவி காட்சிகள்

Last Updated : Jun 20, 2022, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.