தமிழ்நாடு

tamil nadu

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஆவணி அஷ்வதி பொங்கல் விழா

By

Published : Sep 14, 2022, 10:32 AM IST

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஆவணி அஷ்வதி பொங்கல் விழாவில் 5001 பொங்கல் வழிபாடுகள்

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஆவணி அஷ்வதி பொங்கல் விழாவை முன்னிட்டு 5001 பானைகளில் பொங்கல் வைத்து பக்கர்கள வழிபட்டனர்.

பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலும் ஒன்று. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளாவை சேர்ந்த பெண் பக்தர்கள் இருமுடி கட்டுடன் வந்து அம்மனை தரிசித்து செல்வதால் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஆவணி அஷ்வதி பொங்கல் விழாவில் 5001 பொங்கல் வழிபாடுகள்

இந்த கோயிலில் 10 நாள் மாசி கொடை விழாவிற்கு பின் ஆவணி அஷ்வதி பொங்கல் விழா மூன்று நாட்கள் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு அஷ்வதி பொங்கல் விழா இன்று நடைபெற்றது. அப்போது கோவில் வளாகம் முழுவதும் 5001 பானைகளில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நாளை சிறப்பு பூஜைகளுடன் ஆவணி அஷ்வதி பொங்கல் விழா நிறைவு பெறும்.

இதையும் படிங்க: சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் ஆவணி தேர் திருவிழா கோலாகலம்

ABOUT THE AUTHOR

...view details