தமிழ்நாடு

tamil nadu

ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் கைது

By

Published : Feb 6, 2022, 4:11 PM IST

ரவுடி படப்பை குணாவின் வலதுகரமாக செயல்பட்டு வந்த தலைமறைவான போந்தூர் சேட்டு மற்றும் குணாவின் கூட்டாளியான மாம்பாக்கம் பிரபு ஆகியோர் சிறப்பு தனிப்படை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் கைது
ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் கைது

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து ஆகிய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து காஞ்சிபுரம் சரகத்தில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் சரகத்தில் செங்கல்பட்டில் ஏழு போ், திருவள்ளூரில் 18 போ், காஞ்சிபுரத்தில் ஒன்பது போ் என மொத்தம் 34 போ் முதன்மைக் குற்றவாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் கைது

கைது நடவடிக்கை

இவர்களைத் தவிர திருவள்ளூரில் 720, செங்கல்பட்டில் 582, காஞ்சிபுரத்தில் 592 போ் உள்பட மொத்தம் 1,894 போ் குற்றவாளிகள் அடங்கிய பட்டியலையும் காவல் துறையினர் தயார் செய்திருக்கிறார்கள்.

காஞ்சிபுரம் சரகத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை கைது செய்யும் பணியில் காவல் துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் ரவுடி குணா மற்றும் அவரது கூட்டாளிகள் ஆகியோர் தொடர்ந்து மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

ரவுடி படப்பை குணாவின் கூட்டாளிகள் கைது

இந்நிலையில், அதனை ஒடுக்குவதற்கு ஏடிஎஸ்பி வெள்ளதுரை தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவரது தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

ரவுடி படப்பை குணா

மதுரமங்கலம் பகுதியைச்சேர்ந்தவர் ரவுடி படப்பை குணா எனப்படும் குணசேகரன். இவர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியப் பகுதிகளில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது, நிறைய ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள்கடத்தல் என 46 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் எட்டு கொலை வழக்குகளும் அடங்கும். பலமுறை பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை சென்றுள்ளார்.

பிரபல ரவுடி படப்பை குணாவை சுற்றி வளைக்கும் முயற்சியில் அவருடைய வலதுகரமாக இருந்துவந்து போந்தூர் சிவா கைது செய்யப்பட்டார். அதேபோல் அவருக்குச் சொந்தமான வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

சரணடைந்தபடப்பை குணா

இதைத்தொடர்ந்து சில நாள்களுக்கு முன்பு, ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் பின் சரணடைந்த படப்பை குணா பூந்தமல்லி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 110 நன்னடத்தை விதியை மீறியதாக, படப்பை குணாவை மூன்று நாள் விசாரணைக்கு காவல் துறையினர் முன்னிறுத்தி, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார்.

இதற்கிடையில் படப்பை குணாவின் கூட்டாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஏடிஎஸ்பி வெள்ளதுரை தலைமையிலான சிறப்பு தனிப்படை காவல் துறையினர், தலைமறைவாக இருந்த முக்கியக்குற்றவாளியான ரவுடி படப்பை குணாவின் வலதுகரமாக இருந்த போந்தூர் பகுதியைச் சேர்ந்த சேட்டு என்பவரைக் கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் ஒருவர் கைது

மேலும், ரவுடி படப்பை குணாவின் கூட்டாளியும் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவருமான பிரபுவை தனிப்படை
காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், இவர்களுக்குச் சொந்தமான நான்கு சொகுசு வாகனங்களையும் தனிப்படை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க:2021ஆம் ஆண்டில் 3,325 ரவுடிகள் கைது - டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

ABOUT THE AUTHOR

...view details