தமிழ்நாடு

tamil nadu

சாலையில் வலிப்பு வந்து கிடந்த நபர்: மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த அமைச்சர் செங்கோட்டையன்!

By

Published : Dec 8, 2020, 5:10 PM IST

காஞ்சிபுரம்: காரை பகுதியில் சாலையில் வலிப்பு வந்து கிடந்த நபரை மீட்ட தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

வலிப்பு வந்த நபரை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்
வலிப்பு வந்த நபரை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்

காஞ்சிபுரம் அடுத்த காரை பகுதியில் நிவர் , புரெவி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று (டிச.08) ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது காரில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அமைச்சரின் கார் எதிரே மிதிவண்டியில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு சாலையில் கீழே விழுந்ததார்.

இதனைக் கண்ட அமைச்சர், அலுவலர்கள் உடனடியாக வலிப்பு ஏற்பட்டவரை மீட்டு முதலுதவி அளித்தனர். பின்னர், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வலிப்பு வந்த நபரை மீட்ட அமைச்சர் செங்கோட்டையன்

இதையும் படிங்க: 'திமுக அழுகிப்போன தக்காளி; அந்தக் கட்சிக்கு சகுனம் சரியில்லை' - ராஜேந்திர பாலாஜி

ABOUT THE AUTHOR

...view details