தமிழ்நாடு

tamil nadu

உங்களுக்காக பணியாற்றிட வந்த வேலைக்காரன் நான் - டி.ஆர். பாலு எம்.பி. பேச்சு

By

Published : Oct 2, 2022, 5:57 PM IST

Etv Bharat

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு கலந்துகொண்டார்.

காஞ்சிபுரம்:தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் ஆண்டுதோறும் ஆறு கிராம சபைக் கூட்டங்களை நடத்திட தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று(அக். 02) ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், எச்சூர் கிராம ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் குமுதா டோம்னிக் தலைமையில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கிராம சபைக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பங்கேற்றார்.

இந்த கிராம சபைக்கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி எனப்பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராம ஊராட்சியிலுள்ள பழுதடைந்த பள்ளிக்கூட சமையல் அறை கட்டடத்திற்கு புதிய கட்டடம், யமஹா தொழிற்சாலைக்கு செல்ல புதிய சாலை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவர், 8ஆம் வகுப்பு வரையிலுள்ள பள்ளியை 12ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்த வேண்டும் என அக்கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர். அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. T.R.பாலு கிராம மக்களுக்கு உறுதி அளித்தார்.

எச்சூரில் கிராம சபைக்கூட்டம்

இதன் பின் கிராம சபைக்கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் எம்.பி. டி.ஆர்.பாலு பேசுகையில், 'இந்தியாவிலேயே 543 மக்களவைத்தொகுதி உறுப்பினர்கள் இருக்கின்ற நிலையில், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத்தொகுதிக்கு மட்டும் தான் இரண்டு நாடாளுமன்ற அலுவலகம் இருக்கின்றது. ஆனால், பொது மக்கள் இதனை முறையாக பயன்படுத்திக்கொள்வதில்லை. அதனை நீங்கள் முறையாகப்பயன்படுத்திட வேண்டும்' எனக் கோரிக்கை விடுத்தார்.

கிராம சபைக் கூட்டத்தில் டி.ஆர். பாலு பேச்சு

மேலும், 'தேர்தல் காலத்தில் உங்களுக்காக நாங்கள் பணியாற்றிட என்னை வேலைக்காரனாகத் தேர்ந்தெடுங்கள் என நான் சொல்லியிருந்தேன். நான் வைத்த இந்த கோரிக்கையில் எந்தவித பின்னம் ஏற்படாத வகையில் உங்களுக்காக பணியாற்றிக்கொண்டிருப்பேன்' எனப்பேசினார்.

இதையும் படிங்க: உடல் நலக்குறைவு காரணமாக நல்லகண்ணு அரசு மருத்துவமனையில் அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details