தமிழ்நாடு

tamil nadu

உள்ளாட்சி தேர்தல் புதிய மாவட்டங்களை பாதிக்காது - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

By

Published : Nov 20, 2019, 4:43 AM IST

காஞ்சிபுரம்: உள்ளாட்சித் தேர்தல் புதிய மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தாது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Interview with Minister Mafa Pandiyarajan

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உலக பாரம்பரிய வார விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குறுகிய காலத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் அரைநாள் அருகிலுள்ள கண்காட்சியை காண்பதற்கும், அந்த கண்காட்சியில் பார்த்தது குறித்த வினாடி வினா போன்ற சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும்.

இது அடுத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். கீழடியில் 2,580 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பொருள்களை கண்டெடுப்பது நம் வரலாற்று சாதனையாகும்.

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி

மேலும் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் எக்காரணத்தைக் கொண்டும் உள்ளாட்சி தேர்தல் தடைபடாது. அதேபோல் புதிய மாவட்டங்களுக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றார்.

இதையும் படிங்க:20 நாட்களுக்குப் பிறகு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிய மாமல்லபுரம்!

Intro:மாமல்லபுரத்தில் இன்று கடற்கரை கோவில் அருகில் பாரம்பரிய வார விழா சிறப்பாக துவக்கப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக தமிழக தொழில்துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார்


Body:காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று உலக பாரம்பரிய வார விழா துவக்கப்பட்டது.
இதில் முதல் பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறப்பு மிக்க சிற்பங்கள் கோவில்களில் புகைப்படங்கள் வைத்து புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது .
இதனை திறந்து வைத்து பார்வையிட்டார் தொழில்துறை அமைச்சர் பாண்டியராஜன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது இன்னும் குறுகிய காலங்களில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் அரைநாள் அருகிலுள்ள கண்காட்சியை காண்பதற்கும் அதிலிருந்து வினாடி வினா போன்ற சிறப்பு தேர்வுகள் நடத்தப்படும் .
எனவும் இதை அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
பிறகு கீழடியில் 2580 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் வாழ்ந்த தாகும் அவர்களில் சிறப்புமிக்க பொருள்கள் கண்டெடுப்பது நம் வரலாற்று சாதனையாகவும் கருதப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து சிறப்பு முகாம்களும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன உள்ளாட்சி தேர்தல் நடத்துவது உறுதி .
எனவே புதிதாக பிரிக்கப்படும் மாவட்டங்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என கூறினார்


Conclusion:இந்தப் பாரம்பரிய வார விழாவில் ஏராளமான பள்ளி மாணவர்களும் மாணவிகளும் ஆசிரியர்களும் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details