தமிழ்நாடு

tamil nadu

காஞ்சியில் கொட்டி தீர்த்த கன மழை: 24 மணி நேரத்தில் 45.61 செ.மீட்டர் மழை

By

Published : Nov 2, 2022, 1:23 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 45.61 செ.மீட்டர் மழை கொட்டித்தீர்த்துள்ளது.இதில் அதிகப்பட்சமாக செம்பரம்பாக்கத்தில் 9.52செ.மீட்டரும், குறைந்தபட்சமாக காஞ்சிபுரத்தில் 4.56 செ.மீட்டரும் மழையானது பதிவாகியுள்ளது.

காஞ்சியில் கொட்டி தீர்த்த கன மழை
காஞ்சியில் கொட்டி தீர்த்த கன மழை

காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழையை ஒட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகவே கன மழை பெய்து வருகிறது. மேலும் இந்த தொடர் கன மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவின்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்றைய தினமும் விடுமுறை அளிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை முதலே காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வருகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்தரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழையானது பெய்து வருகிறது.

காஞ்சியில் கொட்டி தீர்த்த கன மழை

மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சாலையில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ள நீரால் வாகன ஓட்டிகளும், பொது மக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் மழை அளவு,

காஞ்சிபுரம் 4.56 செ.மீ
உத்திரமேரூர் 6.3 செ.மீ
வாலாஜாபாத் 7.08 செ.மீ
ஸ்ரீபெரும்புதூர் 9.08 செ.மீ
குன்றத்தூர் 9.07 செ.மீ
செம்பரம்பாக்கம் 9.52 செ.மீ., என 45.61 செ.மீட்டர் மழையானது கொட்டித்தீர்த்துள்ளது. இதில் சராசரியாக 7.6 செ.மீட்டர் மழையானது பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் மிகப்பெரிய மழை பெய்தும் பாதிப்பு குறைவுதான்.. மா.சுப்ரமணியன்

ABOUT THE AUTHOR

...view details