காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள களத்துமேட்டுகாட்டில், கிடந்த நெல் மூட்டைகளை இரண்டு மாத நீண்ட இழுபறிக்குப் பிறகு, கடந்த 20 நாள்களுக்கு முன்பே வியாபாரிகள் கொள்முதல்செய்தனர்.
இதையடுத்து, நெல் மூட்டைகளைத் தகுந்த ஆவணங்களின்றி நேரடியாகக் கொள்முதல் செய்வதைக் கண்டித்து நேற்று (ஜூன் 25) உழவர்கள் லாரியை வழிமறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், நெல் கொள்முதல் மைய அலுவலர்கள் மீது உழவர்கள் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து, உழவர்கள் கூறுகையில் ’’நெல் கொள்முதல் நிலைய அலுவலர் தகுந்த ஆவணங்களோடு நெல்லை தரம்பிரித்து ஈரப்பதம்உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்தார். பதிவிட்டு டோக்கன் வழங்கி நெல்லை கொள்முதல் செய்வது விதிமுறைகளுக்குள்பட்ட நடவடிக்கை.
உழவர்கள் நெற்பயிரை அறுவடைசெய்து பல மாதங்களாக காத்துக் கிடந்து நீண்ட இழுபறிக்குப் பின்னர் நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இவை, அனைத்து மாவட்டங்களில் உள்ள அவலநிலை.
ஆனால், வியாபாரிகளிடம் எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளாமல் லாரிகளில் நேரடியாகக் கொள்முதல் செய்கின்றனர். இதேபோல, கொள்முதல் மைய அலுவலர்கள், வியாபாரிகள் கூட்டாக தங்களை அலட்சியம் செய்கின்றனர்" என வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 27 வயது ரவுடி குண்டர் சட்டத்தில் கைது!