தமிழ்நாடு

tamil nadu

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் குவியல் குவியலாக குப்பைகள்.. பொதுமக்கள் அகற்றக் கோரிக்கை...

By

Published : Sep 26, 2022, 10:25 PM IST

Etv Bharat

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்:உலக பிரசித்திப் பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமான ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக ராஜகோபுரம் உட்பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபம் செல்லும் வழியில் குவியல் குவியிலாகக் கொட்டப்பட்ட குப்பைகள் அப்புறப்படுத்தாமல் கிடக்கின்றன. இது அங்கு வந்து செல்லும் பக்தர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இக்குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் கேட்டதற்கு, மாநகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை அப்புறப்படுத்த தகவல் கொடுத்தும் இதுவரை வரவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்த குப்பைகளை அப்புறப்படுத்தி கோயிலை தூய்மைப்படுத்துமாறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் கோயில் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

இதையும் படிங்க: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details