தமிழ்நாடு

tamil nadu

பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு

By

Published : Oct 26, 2021, 9:05 PM IST

Updated : Oct 27, 2021, 7:47 AM IST

சங்கராபுரம் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

பட்டாசு கடையில் பெரும் தீ விபத்து
பட்டாசு கடையில் பெரும் தீ விபத்து

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்திலுள்ள பட்டாசு கடையில் நேற்று (அக்.26) மாலை எதிர்பாராத விதமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர். தீக்காயமடைந்த 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் பட்டாசுகள் அருகிலிருந்த பேக்கரி, ஹோட்டல், மளிகைக்கடைகளில் சிதறியதால் அங்கிருந்த நான்கு சிலிண்டர்களும் வெடித்து.

பட்டாசு கடையில் பெரும் தீ விபத்து

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பலத்த தீக்காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நாசர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சங்கராபுரம் பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க:30 நாட்களுக்குப் பட்டாசு கடை வைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - திருவாரூர் மாவட்ட ஆட்சியர்

Last Updated : Oct 27, 2021, 7:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details