தமிழ்நாடு

tamil nadu

மதுபோதையில் மகனை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த தந்தை கைது

By

Published : Aug 24, 2022, 12:35 PM IST

கள்ளக்குறிச்சி அருகே மதுபோதையில் தனது மகனை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையில் மகனை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த தந்தை கைது
மதுபோதையில் மகனை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த தந்தை கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த எலியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி. இவர் கேரளாவில் மீன் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகளுக்கு பிறந்துள்ள குழந்தையை பார்ப்பதற்காக மயில்சாமி, கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் தந்தை மயிலுக்கும் அவரது மகன் சசிகுமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக குடிபோதையில் இருந்த சசிகுமார் மற்றும் மயில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். அப்போது மயில்சாமி தனது வீட்டில் இருந்த கடப்பாரையை கொண்டு சசிகுமாரின் கண்களில் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே மயில்சாமியை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:மனைவியை ரயில் முன்பு தள்ளிக்கொலை செய்த நபர் கைது

ABOUT THE AUTHOR

...view details