ETV Bharat / bharat

மனைவியை ரயில் முன்பு தள்ளிக்கொலை செய்த நபர் கைது

author img

By

Published : Aug 23, 2022, 4:13 PM IST

தானேவில் மனைவியை ரயில் முன்பு தள்ளிக் கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Thane
Thane

தானே: மகாராஷ்டிர மாநிலம், தானே அருகே உள்ள வசை ரோடு ரயில் நிலையத்தில், நபர் ஒருவர் தனது மனைவியை ரயில் முன்பு தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அதில், அதிகாலை 4 மணியளவில் ரயில் நிலையத்தில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியை எழுப்பிய அந்த நபர், தண்டவாளத்திற்கு அருகே அழைத்துச்சென்று ரயில் முன்பு தள்ளிவிட்டார். பிறகு தனது இரண்டு குழந்தைகளையும், கைப்பையையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பிவாண்டியில் இருந்த அந்த நபரை கைது செய்தனர். மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாகவே இந்தக்கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க:நொய்டா இரட்டைக் கோபுரங்களில் 3,700 கிலோ வெடிபொருட்கள் பொருத்தம்


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.