தமிழ்நாடு

tamil nadu

கராத்தே: மாநில அளவில் 13 தங்க பதக்கம் பெற்ற ஈரோடு அரசுப்பள்ளி

By

Published : Dec 6, 2021, 7:50 AM IST

மாநில அளவிலான கராத்தே போட்டியில் ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி 13 தங்க பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளது.

வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி சாதனை
வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி சாதனை

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அடுத்த வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் அரசு சார்பில் தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சியை தேசிய பயிற்சியாளர் பரமேஸ்வரன் அளித்து வருகிறார். மேலும் உலக கராத்தே சங்க நடுவர் சம்பத்குமார் தலைமையில் தேசிய பயிற்சியாளர் பரமேஸ்வரன், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக தினமும் காலை மாலை பயிற்சி அளித்து வருகிறார்.

வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி சாதனை

சில தினங்களுக்கு முன்பு ஈரோடு ராஜுவ்காந்தி கல்லூரியில் மாநில அளவிளான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 18 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் 13 தங்கம், 1 வெள்ளி, 4 வெண்கலம் ஆகிய பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆடுமேய்க்க சென்றவரைப் பிடித்து தாக்கிய காவலர் - பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் முற்றுகைப்போராட்டம்

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details