தமிழ்நாடு

tamil nadu

படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் ஓவியங்கள்: அரசுப் பள்ளியை அழகாக்கிய ஆசிரியர்கள்

By

Published : Sep 17, 2021, 5:26 PM IST

அழகாக்கிய ஆசிரியர்கள்
அழகாக்கிய ஆசிரியர்கள் ()

மாணவர்களின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தெங்குமரஹாடா பகுதியிலுள்ள அரசுப் பள்ளியை வண்ணம் தீட்டி ஓவியங்களைப் புனைந்துள்ளனர் திருப்பூரைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

ஈரோடு:திருப்பூர் பட்டாம்பூச்சி தொண்டு நிறுவனம் - பாண்டியன் நகர் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் கார்த்திகேயன், ராஜுகிருஷ்ணன், ரவிச்சந்திரன், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் இணைந்து மலை கிராமப் பள்ளிகளை வண்ணமயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சுமார் 50 பள்ளிகளை வண்ணம் தீட்டி அழகுப்படுத்தியுள்ளனர். இதற்காக ஆசிரியர்கள் எந்தக் கட்டணமும் பெறுவது இல்லை.

அரசுப் பள்ளியை அழகாக்கிய ஆசிரியர்கள்

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திலுள்ள தெங்குமரஹாடா ஆரம்ப பள்ளியில் நாட்டின் தலைவர்களின் ஓவியங்கள், இயற்கை காட்சிகள் எனப் பல்வேறு விதமான ஓவியங்களை மாணவர்களின் கவனத்தை ஈர்க்க புனைந்துள்ளனர். இதற்காக 30 கிமீ தூரம் அடர்ந்த காட்டுப்பகுதியில் பயணித்தனர்.

வண்ணமயமான ஓவியங்கள்

பள்ளி வகுப்பறையில் இயற்கை காட்சிகளுடன் அமைந்த அருவி, விலங்குகளைப் புனைந்துள்ளனர். மாணவர்கள் எளிதில் கற்கும்விதமாக பாடம் சார்ந்த ஓவியங்கள் மனித உறுப்புகள், இந்தியா, தமிழ்நாடு வரைபடங்கள் வரையப்பட்டுள்ளன.

வண்ணமயமான ஓவியங்கள்

மேலும் மாணவர்கள் ஆங்கிலம் கற்க ஏதுவாக ஆங்கிலச் சொற்கள், வார நாள்களை எழுதி வைத்துள்ளனர். ஆரம்பப் பள்ளி என்பதால் மாணவர்களுக்குப் பிடித்தமான சோட்டா பீம், பறவைகள் ஓவியங்களையும் புனைந்துள்ளனர். இதற்காகச் செலவிடப்பட்ட 50 ஆயிரம் ரூபாயும் தொண்டு நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

வண்ணமயமான ஓவியங்கள்

பட்டாம்பூச்சி தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் கூறுகையில், மாணவர்களின் கற்றல் ஆர்வத்தைத் தூண்ட, பாடங்களை எளிதில் புரிந்துகொள்ள இது போன்ற ஓவியங்களை பள்ளிகளில் வரைந்து சேவையாற்றுவதாகக் கூறினார்.

பள்ளி விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களின் சேவையைப் பல்வேறு தரப்பினரும் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க: பெரியார் - சட்டத்துக்குள் அடங்காத சித்தாந்தம்

ABOUT THE AUTHOR

...view details