தமிழ்நாடு

tamil nadu

நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டு தள்ளுமுள்ளு!..

By

Published : Apr 13, 2023, 10:52 PM IST

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில், மாட்டிறைச்சி கடை அமைப்பது குறித்த விவாதத்தில் பாதியில் வெளியேறிய ஆணையாளரை கண்டித்து, ஆணையாளர் அறையில் நகராட்சித் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதம்.

நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டு தள்ளுமுள்ளு!..
நகராட்சி ஆணையாளரை முற்றுகையிட்டு தள்ளுமுள்ளு!..

ஈரோடு:புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் அவசரக் கூட்டம் இன்று நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர் மன்ற தலைவர் ஜனார்த்தனன், துணைத் தலைவர் சிதம்பரம், ஆணையாளர் சையது உசேன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் வாரச்சந்தையில் மாட்டிறைச்சி கடை வைப்பது குறித்து நடந்த போராட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது, நகர்மன்ற உறுப்பினர்கள் ஆணையாளர் மீது தொடர்ந்து குற்றஞ்சாட்டினர். இதனால், திடீரென ஆணையாளர் சையது உசேன் கூட்ட அரங்கில் இருந்து வெளியேறி தன்னுடைய அறைக்கு சென்றுள்ளார். இதனைதொடர்ந்து, கூட்டம் நிறைவடையாமல் ஆணையாளர் பாதியில் சென்றதை கண்டித்து, நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் ஆணையர் அறைக்கு சென்று அவரை முற்றுகையிட்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:விழுப்புரம் ஆசிரம விவகாரம் - 7 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

அப்போது, ஆணையாளர் தன்னுடைய அறையை விட்டு வெளியேறிய போது தலைவரும், கவுன்சிலர்களும் ஆணையாளரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மேலும், கூட்டம் நிறைவடையாமல் எதற்கு பாதியில் சென்றீர்கள்? கூட்டத்தை முடித்துவிட்டு தான் வெளியே செல்ல வேண்டும் என தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.

இதை தொடர்ந்து ஆணையாளர் மீண்டும் கூட்ட அரங்கிற்கு வந்தார். அதைத்தொடர்ந்து, நகர மன்ற கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் வாரசந்தை பகுதியை தவிர்த்து பிற இடங்களில் மாட்டிறைச்சி கடை வைத்துக் கொள்ளலாம் என நகராட்சி அனுமதியளித்துள்ளது.

இதையும் படிங்க:ஒடிசா ஹனுமன் ஜெயந்தி பேரணியில் கல்வீச்சு; 43 பேர் கைது - 48 மணிநேரத்துக்கு இணைய சேவை முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details