தமிழ்நாடு

tamil nadu

காதல் கணவரை காணவில்லை என எஸ்.பி. அலுவலகத்தில் மனைவி புகார்!

By

Published : Oct 2, 2020, 7:29 PM IST

ஈரோடு: காதலித்து திருமணம் செய்து கொண்ட தனது கணவரை காணவில்லை என மனைவி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார்
புகார்

கரூர் மாவட்டம் வெள்ளியம்பாளையம் செல்வ நகர் காலனி பகுதியை சேர்ந்தவர் காயத்ரி (வயது 22). இவர் ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், கடந்த 2015ஆம் ஆண்டு கொடுமுடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தபோது, ஆட்டுக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை காதலித்து கரூர் ஈஸ்வரன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நான் எனது கணவருடன் கொடுமுடி அருகே உள்ள குந்தாணி பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன்.
எங்களுக்கு மூன்று வயதில் நித்யஸ்ரீ என்ற மகள் உள்ளார். சதீஷ்குமார் பெற்றோர்கள் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கொடுமுடி பஸ் நிலையத்திற்கு வரச்சொல்லி எங்களையும் குழந்தைகளும் பார்த்து செல்வார்கள்.
இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு எனக்கும் கணவருக்கும் சண்டை வந்தது. இதனால் நான் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றேன். கடந்த மாதம் கணவர் கைவிட்டுச்சென்று விட்டதாக கூறி, இதுகுறித்து மலையம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இரு தரப்பினரையும் அழைத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக எனது கணவர் சதீஷ்குமாரை காணவில்லை. அவருடைய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. கணவரை அவரது உறவினர்கள் கடத்தி சென்று விட்டார்கள் என்றும் உடனடியாக நடவடிக்கை எடுத்து எனது கணவரை மீட்டு என்னுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என்றும் எனக்கும் குழந்தைக்கும் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details