தமிழ்நாடு

tamil nadu

கோயிலிலிருந்து பெரியார், அண்ணா படங்களை அகற்றக்கோரி மனு!

By

Published : Dec 9, 2019, 4:39 PM IST

ஈரோடு: கோயில் கதவில் உள்ள பெரியார், அண்ணா படங்களை அகற்ற வலியுறுத்தி மண்வெட்டி, கடப்பாறையுடன் வந்து இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் நூதனமுறையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

நூதனமாக மனு அளித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி
hindu makkal katchi, நூதனமாக மனு அளித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி

ஈரோடு மாவட்டம் காளமங்கலம் குலவிளக்கம்மன் கோயிலின் முன்பக்க கதவில் பெரியார், அண்ணா, அன்னை தெரசா ஆகியோரின் படங்கள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படங்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி நிர்வாகி பிரகாஷ் மண்வெட்டி, கடப்பாறையுடன் வந்து நூதனமுறையில் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். மேலும் அந்தப் படங்களுக்கு பதிலாக சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்சின்னமலை, பொல்லான், காளிங்கராயன் படங்களை அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

மண்வெட்டி, கடப்பாறையுடன் நூதனமாக மனு அளித்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி

பெரியார், அண்ணா படங்களை உடனடியாக அகற்றாவிட்டால் பக்தர்கள் கரசேவையில் ஈடுபட்டு படங்களை அகற்ற நேரிடும் எனவும் இந்து மக்கள் கட்சி நிர்வாகி எச்சரிக்கைவிடுத்தார்.

Intro:ஈரோடு ஆனந்த்
டிச09

கோயில் கதவில் பெரியார், அண்ணா படங்களை அகற்றுக : கடப்பாறை, மண்வெட்டியுடன் ஆட்சியரிடம் மனு!

ஈரோடு அருகே கோவில் கதவில் உள்ள தந்தை பெரியார், அண்ணா படங்களை அகற்ற வலியுறுத்தி மண்வெட்டி, கடப்பாறையுடன் வந்து நூதனமுறையில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் காளமங்கலம் குலவிளக்கம்மன் கோவில் முன் பக்க கதவில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் அன்னை தெரசாவின் படங்கள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படங்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி நிர்வாகி பிரகாஷ் மண்வெட்டி, கடப்பாறையுடன் வந்து நூதனமுறையில் ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Body:மேலும் அந்த படங்களுக்கு பதிலாக சுதந்திர போராட்ட வீரர் தீரன்சின்னமலை, பொல்லான் மற்றும் காளிங்கராயன் படங்களை அமைக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.

Conclusion:பெரியார், அண்ணா படங்களை உடனடியாக அகற்றாவிட்டால் பக்தர்கள் கரசேவையில் ஈடுபட்டு படங்களை அகற்ற நேரிடும் எனவும் இந்து மக்கள் கட்சி நிர்வாகி எச்சரிக்கை விடுத்தார்.

பேட்டி : பிரகாஷ் - மாவட்ட தலைவர்,இந்து மக்கள் கட்சி.

ABOUT THE AUTHOR

...view details