தமிழ்நாடு

tamil nadu

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் ஐந்து சவரன் தங்கச் சங்கிலி பறிப்பு!

By

Published : Jul 24, 2020, 4:15 PM IST

ஈரோடு: சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் ஐந்து சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cctv footage of chain snatching from woman in erode
cctv footage of chain snatching from woman in erode

ஈரோடு பெரியவலசு பகுதியைச் சேர்ந்தவர் பொன்மணி. இவர், நேற்று (ஜூலை 23) இரவு வீட்டின் அருகே சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பொன்மணி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிவிட்டனர்.

இதுகுறித்து, பொன்மணி காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வீரப்பன் சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

தங்கச் சங்கிலி பறிப்பு

தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட காட்சிகள் அங்குள்ள பேக்கரி கடையில் பொருத்தப்பட்டிந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதனைத்கொண்டு வீரப்பன் சத்திரம் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க... பட்டப்பகலில் கத்தி முனையில் பணப்பறித்தவர்கள் கைது!

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details