தமிழ்நாடு

tamil nadu

தண்ணீர் பாத்திரத்தில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

By

Published : Jul 2, 2022, 9:01 PM IST

ஈரோடு மாவட்டத்தில் தண்ணீர் பாத்திரத்தில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் பாத்திரத்தில் கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
தண்ணீர் பாத்திரத்தில் கவிழ்ந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். கட்டுமான தொழிலாளியான இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. முருகன் கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்து வரும் நிலையில், வீட்டில் இரண்டு குழந்தைகளுடன் தாய் ரேவதி வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை அறையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாத்திரத்தில் விழுந்துள்ளது. குழந்தையின் சத்தம் கேட்காததால் ரேவதி குழந்தையை தேடியுள்ளார். அப்போது இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து உடனடியாக குழந்தையை, பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்.

அப்போது குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதற்கிடையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு காவல்துறையினர், குழந்தையை உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆரணியில் பிரியாணியில் இருந்த கரப்பான் பூச்சி!

ABOUT THE AUTHOR

...view details