தமிழ்நாடு

tamil nadu

காவலர்களிடமிருந்து தப்பிக்க பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்ட திருடன்!

By

Published : Dec 3, 2020, 6:59 AM IST

திண்டுக்கல்: வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில், காவலர்களிடமிருந்து தப்பிக்க பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட திருடனால் பரபரப்பு ஏற்பட்டது.

கழுத்தை அறுத்து கொண்ட திருடன்
கழுத்தை அறுத்து கொண்ட திருடன்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியின் செல்போனை பிக்பாக்கெட் திருடன் பறித்துக்கொண்டு, தப்பிக்க முயற்சித்துள்ளான். அப்போது, அவனைப் பார்த்து மக்கள் கூச்சலிடவே, பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் திருடனைப் பிடிக்க முயன்றனர்.

மாட்டிக்கொள்ளும் நேரத்தில் திருடன், தான் வைத்திருத்த பிளேடை எடுத்து தற்கொலை செய்துகொள்வேன் என காவல் துறையினரை மிரட்டியுள்ளான். அப்போதும் காவல் துறையினர் நெருங்கவே, பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளான்.

பின்னர் காவல் துறையினர் அவனை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். முதல்கட்ட விசாரணையில் திருடன், மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த கிறிஸ்டிராஜ் (40) என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:'பகலில் கொத்தனார்; இரவில் திருட்டு'- பலே திருடன் கைது

ABOUT THE AUTHOR

...view details