ETV Bharat / state

'பகலில் கொத்தனார்; இரவில் திருட்டு'- பலே திருடன் கைது

author img

By

Published : Nov 28, 2020, 2:01 PM IST

மதுரை: பகலில் கட்டட தொழிலாளர் போர்வையில் பணியில் சேர்ந்து, இரவில் அங்குள்ள வெல்டிங்மிஷினை திருடிவந்த பலே திருடனை காவல் துறையினர் கைது செய்தனர்.

இரவில் திருட்டில் ஈடுபட்டு வந்த பலே திருடன்
இரவில் திருட்டில் ஈடுபட்டு வந்த பலே திருடன்

மதுரை, சிவகங்கை, பரமக்குடி , கரிமேடு, புதூர், வாடிப்பட்டி பகுதிகளில் கட்டுமான பணியின்போது பயன்படுத்தப்படும் வெல்டிங்மிஷின் திருடுபோவதாக 30க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் புகார்கள் வந்தன.

இதேபோல் நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்திற்கும் புகார் வந்தது. இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை காவல் துறையினர் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியைக் கொண்டு குற்றவாளியை தேடி வந்தனர்.

தற்போது மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் அந்த பலே திருடனை தனிப்படை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் அலங்காநல்லூர் கரட்டுகாலனி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், பகலில் கட்டட தொழிலாளர் போர்வையில் பணியில் சேர்ந்து இரவில் அங்குள்ள வெல்டிங்மிஷினை திருடி குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் மணிகண்டனை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 27 வெல்டிங் மிஷின்களை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: பெரம்பலூர் அருகே 400 கிலோ சின்ன வெங்காயம் திருட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.