தமிழ்நாடு

tamil nadu

ஆஸ்திரேலியா செல்ல பணமில்லை' - விஷமருந்தி இளம் தம்பதி தற்கொலை!

By

Published : Aug 6, 2020, 7:32 PM IST

திண்டுக்கல்: தெலங்கானாவைச் சேர்ந்த இளம் தம்பதி, ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல போதிய பணம் இல்லாததால் மனமுடைந்து விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

suicide
suicide

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளம் தம்பதியான கோபி கிருஷ்ணன்(27), நந்தினி(26) ஆகிய இருவரும் ஒரு வருடத்திற்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அட்டுவம்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் வெளிநாட்டு மென்பொருள் நிறுவனத்தில் இங்கிருந்து இணையம் வழியாகப் பணிபுரிந்துவந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக இருவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் கதவைப் பலமுறை தட்டிப் பார்த்தும் திறக்கவில்லை. எனவே, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சடலமாகக் கிடந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அவர்கள் அறையில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்ட கடிதம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதில், ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல அனுமதி கிடைத்தும், அதற்கு தேவையான போதிய பணம் இல்லாததால் விரக்தியில் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக எழுதப்பட்டிருந்தது.

இருப்பினும், இது கொலையா அல்லது தற்கொலையா அல்லது வேறு ஏதும் காரணத்தின் அடிப்படையில் நேர்ந்ததா என பல்வேறு கோணங்களில் கொடைக்கானல் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

இதையும் படிங்க:காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை: சாதி பிரச்னையால் நேர்ந்த அவலம்!

ABOUT THE AUTHOR

...view details