தமிழ்நாடு

tamil nadu

நத்தம் விஸ்வநாதன் வழங்கிய நிவாரணம்

By

Published : May 26, 2020, 2:39 AM IST

திண்டுக்கல்: நத்தம் தொகுதிக்குட்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண பொருட்களை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வழங்கினார்.

Rice
Rice

கரோனா பாதிப்பு பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை நான்காம் கட்டமாக வரும் 31-ஆம் தேதி வரை நீடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனை கருத்தில் கொண்டு நத்தம் தொகுதி முழுவதும் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் 97 ஆயிரம் பேருக்கும், குடும்ப அட்டை இல்லாத மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனது சொந்த செலவில் 5 கிலோ அரிசி நிவாரணப்பொருளாக வழங்க திட்டமிட்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக இன்று தவசிமடை, தோட்டனூத்து, கூவனூத்து ஆகிய பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருளான 5 கிலோ அரிசி பைகளை விஸ்வநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நத்தம் அதிமுக நிர்வாகி ராமராஜ், மத்திய கூட்டுறவு வங்கி துணை தலைவர் கண்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பொருட்களை வழங்கினார்கள்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற கூட்டுத்தொடர் குறித்து வெங்கையா நாயுடு ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details