தமிழ்நாடு

tamil nadu

இந்திய அளவில் கெத்து காட்டிய கொடைக்கானல் பள்ளி மாணவர்கள்

By

Published : Aug 19, 2021, 9:16 AM IST

இந்திய அளவில் நடைபெற்ற தடகள, கால்பந்து போட்டிகளில் கொடைக்கானல் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏழு தங்கமும், 15 வெள்ளிப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

கொடைக்கானல் பள்ளி மாணவர்கள்
கொடைக்கானல் பள்ளி மாணவர்கள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் எம்.எம்.தெருவில் கொடைக்கானல் பப்ளிக் ஸ்கூல் (Kodaikanal Public School) அமைந்துள்ளது. இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், மாநில அளவிலான தடகள, கால்பந்து போட்டிகளில் முன்னதாக பங்கேற்ற நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளுடன் மோதினர்.

இப்போட்டியில் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து, பஞ்சாப்பில் நடைபெற்ற இந்திய அளவிலான போட்டியில் தெலங்கானா, ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்களை எதிர்கொண்டனர்.

இந்திய அளவில் கெத்து காட்டிய கொடைக்கானல் பள்ளி மாணவர்கள்

இதில், ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகியவற்றில் வெற்றிபெற்று ஏழு தங்கமும், கால் பந்து போட்டியில் மாணவர்கள் 15 வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளனர். இந்நிலையில், பதக்கங்களை வாங்கிக் குவித்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதையும் படிங்க:பழனி முருகன் கோயிலுக்கு ரூ.1.10 கோடி காணிக்கை வரவு

ABOUT THE AUTHOR

...view details