ETV Bharat / state

பழனி முருகன் கோயிலுக்கு ரூ.1.10 கோடி காணிக்கை வரவு

author img

By

Published : Aug 19, 2021, 6:20 AM IST

பழனி முருகன் கோயிலில் நடத்தப்பட்ட உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் ஒரு கோடியே 10 லட்சத்து 75 ஆயிரத்து 90 ரூபாய் காணிக்கையாகக் கிடைத்தது தெரியவந்தது.

பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணுவது தொடர்பான காணொலி
பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணுவது தொடர்பான காணொலிபழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணுவது தொடர்பான காணொலி

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் உள்ள ஆன்மிகத் தலங்களில் மிக முக்கியமானது பழனி முருகன் கோயில். இந்தத் திருத்தலம் முருகனின் மூன்றாம்படை வீடாக கருதப்படுவது மற்றொரு சிறப்பு. தினமும் வெளிமாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு சாமி தரிசனத்துக்காகக் குவிகின்றனர்.

ஒவ்வொருவரும் தங்களது நேர்த்திக்கடனுக்கு ஏற்ப, பணம், தங்கம், வெள்ளிப் பொருள்களை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். பின்னர் உண்டியல்கள் நிரம்பியவுடன், அதில் உள்ள பணமானது கோயில் நிர்வாகத்தால் எண்ணப்படுகிறது.

பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கைகளை எண்ணுவது தொடர்பான காணொலி

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடக்கம்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த தடைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த சில நாள்களுக்கு முன்னரே கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் பழனி மலைக்கோயிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில், நிரம்பிய உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியானது, இணை ஆணையர் நடராஜன் தலைமையில் நேற்று (ஆகஸ்ட் 18) நடைபெற்றது. இதில் 121 கிராம் தங்கம், ஆயிரத்து 562 கிராம் வெள்ளி, ஒரு கோடியே 10 லட்சத்து 75 ஆயிரத்து 90 ரூபாய் பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டது தெரியவந்தது.

காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்கம், வெள்ளியாலான பொருட்கள்
காணிக்கையாகச் செலுத்தப்பட்ட தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருள்கள்

மேலும் 12 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாகப் போடப்பட்டிருந்தன. தங்கம், வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம், பாத்திரங்கள், கடிகாரம் உள்ளிட்ட பொருள்களே பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தன.

உண்டியல் எண்ணும் பணியில் பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், கோயில் ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: கோடநாடு கொள்ளை: சயான் வாக்குமூலத்தால் சிக்கும் எடப்பாடி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.