தமிழ்நாடு

tamil nadu

துர்நாற்றம் வீசும் கொடைக்கானல்.. பொதுமக்கள் கடும் அவதி!

By

Published : Feb 9, 2023, 2:04 PM IST

கொடைக்கானல் கலையரங்கம் பகுதியின் சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால், உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

துர்நாற்றம் வீசும் கொடைக்கானல்.. பொதுமக்கள் கடும் அவதி!
துர்நாற்றம் வீசும் கொடைக்கானல்.. பொதுமக்கள் கடும் அவதி!

கொடைக்கானல் கலையரங்கம் பகுதியின் சாலைகளில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது

திண்டுக்கல்: கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் பகுதியான கலையரங்கத்தில், நகராட்சியின் வாகன நிறுத்தம் உள்ளது. மேலும் அங்கு பல்வேறு உணவு விடுதிகளும் உள்ளன. இந்த உணவு விடுதிகளில் கழிவுநீர் செல்வதற்கு முறையாக வழி இல்லாமல் இருந்து வருவதால், கழிவுநீர் அனைத்தும் சாலைகளில் செல்கிறது.

அதேநேரம் அப்பகுதியில் அமைந்துள்ள நகராட்சியின் கழிப்பறை முறையாக பராமரிக்கப்படாததால், கழிவுநீர் தொட்டிகள் அனைத்தும் சேதமடைந்து திறந்த வெளியில் காணப்படுகிறது. இதனால் கலையரங்கம் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் உணவகங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரும், கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவு நீரும் சேர்ந்து பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பலமுறை நகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இந்தக் கழிவுகள் அனைத்தும் நட்சத்திர ஏரியில் கலந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:இழப்பீடு வழங்காததால் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details