தமிழ்நாடு

tamil nadu

கொடைக்கானலில் பெருகும் போதை காளான் கலாசாரம் - கண்டுகொள்ளுமா காவல் துறை?

By

Published : Dec 29, 2022, 3:31 PM IST

கொடைக்கானலில் சமூக வலைதளங்களில் இளைஞர்கள் சிலர், போதை காளான்களை தேடி சென்று அதனைப் பறிக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

திண்டுக்கல்: உலகளாவிய சுற்றுலா தளமாக விளங்கும் கொடைக்கானலுக்கு, பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் வருகை புரிகிறார்கள். இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை காண்பதற்காக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஒருபுறம் இருந்தாலும், போதை வஸ்துகளை பயன்படுத்துவதற்காக சில இளைஞர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இதற்கான சான்றாக வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய இளைஞர்கள் மத்தியில், இங்கு போதை காளான் பிரபலமடைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள இளைஞர்கள், பலர் வனப்பகுதிகளிலும், புல்வெளிகள் நிறைந்த பகுதிகளிலும் போதை காளான்களை தேடி சென்று, அதனை பறிப்பது போன்று வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

கொடைக்கானலில் இயற்கையாக இருக்கக்கூடிய ’போதை காளான்’ என்ற போதை பொருள் புல்வெளிகளிலும், காடுகளிலும் இயற்கையாக வளர்ந்து வருகிறது. கொடைக்கானலில் மட்டும் இதுவரை 400 வகைகளுக்கும் மேலாக காளான்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் போதை காளானும் ஒரு வகையாகும்.

போதை காளான் மட்டுமல்லாது, உணவாக எடுத்துக் கொள்ளக்கூடிய காளான் வகைகள் மற்றும் விஷத்தன்மை உடைய காளான்களும், இதேபோன்று இயற்கையாகவே கிடைக்கிறது. போதை காளான்கள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தும், காவல் துறையினர் பல வழக்குகள் பதிந்தும் இதுவரை போதை காளான் கலாசாரம் முழுவதுமாக ஒழிக்கப்படவில்லை.

அவ்வாறு பறிக்கப்படும் காளான்கள் போதை காளான்களா அல்லது விஷத்தன்மை கொண்ட காளான்களா என்பது தெரியாமலே அவர்கள் பயன்படுத்தக்கூடும். சமூக வலைதள வீடியோக்கள் மூலம் இதுபோன்ற சம்பவங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், இதனை சைபர் கிரைம் காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போதை காளான் கலாசாரத்தை கொடைக்கானலில் ஒழிப்பதற்காக அரசு துறைகள் முன் வரவேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே வலுத்துள்ளது.

இதையும் படிங்க:சட்டவிரோதமாகப் போதை மருந்து விற்ற ஆப்பிரிக்கர்கள் சிறையில் அடைப்பு..

ABOUT THE AUTHOR

...view details