தமிழ்நாடு

tamil nadu

திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஐ.லியோனி போஸ்டர் கிழிப்பு!

By

Published : Oct 2, 2020, 7:44 PM IST

திண்டுக்கல்லில் திமுக சார்பில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரிலிருந்த, கொள்கை பரப்புச் செயலாளர் ஐ.லியோனி படங்களை கிழித்தனர்.

ஐ.லியோனி போஸ்டர் கிழிப்பு
ஐ.லியோனி போஸ்டர் கிழிப்பு

திண்டுக்கல்:திமுக தலைமையை வாழ்த்தும் விதமாக ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் கொள்கை பரப்பு செயலாளர் ஐ.லியோனி படங்களை பிளேடால் கிழித்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும், பேச்சாளருமான ஐ.லியோனி. இவர், திமுகவில் கழக பணியாற்றி வந்தநிலையில் தற்போது திமுக தலைமை கழகத்திலிருந்து திண்டுக்கல் ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோருக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று ( அக்.02 ) திமுக தலைமை கழகத்திற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, திண்டுக்கல் நகர் பகுதி முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், கட்சியின் தலைவர் ஸ்டாலின், கழகப் பொதுச் செயலாளர் துரைமுருகன், ஐ.லியோனி ஆகியோரின் படங்கள் இடம்பெற்றிருந்தன.

ஐ.லியோனி போஸ்டர் கிழிப்பு

ஆனால், அந்தப் போஸ்டர்களில் திண்டுக்கல் திமுக தலைவரான ஐ. பெரியசாமி படம் இடம் பெறவில்லை. மேலும், முன்னாள் அமைச்சர், திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர்களின் படங்கள், பெயர்கள் இடம்பெறவில்லை.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த திமுகவினர், அனைத்து போஸ்டர்களிலும் உள்ள ஐ.லியோனி படத்தை பிளேடால் கிழித்தனர். இச்சம்பவத்தால், திண்டுக்கல் மாவட்ட திமுக கழக நிர்வாகிகளுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுக தொண்டரை திட்டிய ஆ.ராசா!

ABOUT THE AUTHOR

...view details