தமிழ்நாடு

tamil nadu

Dindigul Accident: வத்தலகுண்டு அருகே கார் - லாரி மோதி விபத்து: பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு!

By

Published : May 5, 2023, 12:59 PM IST

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே கார், லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

வத்தலகுண்டு அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதல்.. பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு
வத்தலகுண்டு அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதல்.. பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர், ரபிக். இவர் தனது நண்பர்களுடன் கேரளா மாநிலம் மூணாறு செல்வதற்காக காரில் வத்தலகுண்டு புறவழிச்சாலையில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, கேரளாவில் இருந்து டீத்தூள் ஏற்றிக் கொண்டு எதிர் திசையில் வந்த லாரி, ரபிக் ஓட்டிச்சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த ரபிக், சமீரா பானு மற்றும் வீரமணி ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற வத்தலகுண்டு காவல் நிலைய போலீசார், காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கார் மீது டிரெய்லர் வாகனம் கவிழ்ந்து கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலி!

ABOUT THE AUTHOR

...view details