தமிழ்நாடு

tamil nadu

பாபர் மசூதி இடிப்பு தினம் - பழனி முருகன் கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

By

Published : Dec 4, 2022, 10:47 PM IST

பழனி முருகன் கோவில்

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

பழனி(திண்டுக்கல்) : டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் பாதுகாப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பழனி மலை, அடிவாரத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மலை ஏறும் பக்தர்கள் கொண்டு செல்லும் பைகள், உடைமைகளை தீவிர சோதனைக்குப் பின்னரே போலீசார் எடுத்துச்செல்ல அனுமதிக்கின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பழனி முருகன் கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:காமன்வெல்த்.. 6 பதக்கங்கள் வென்று திரும்பிய அமுத சுகந்திக்கு உற்சாக வரவேற்பு

ABOUT THE AUTHOR

...view details